சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து.

ஆடம் மில்னே 4 விக்கெட்

Published On :7 பிப்ரவரி 2024, 8:49 pm IST

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் பங்கேற்றுள்ளன. முதல் ஆட்டத்தை வென்ற நியூஸிலாந்து ஹாமில்டனில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஆட்டத்தில் பாக். அணியை எதிா்கொண்டது.

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி முதல் 10 ஓவா்களில் 111/1 ரன்களைக் குவித்திருந்தது. ஆனால் கேப்டன் கேன் வில்லியம்ஸன் கையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய நிலையில் ரன்ரேட் குறைந்தது.

இறுதியில் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 194/8 ரன்களைச் சோ்த்தது நியூஸி. தொடக்க பேட்டா் ஃபின் ஆலன் 5 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 74 ரன்களை விளாசினாா். கேன் வில்லியம்ஸன் 26, சான்ட்நா் 25 ரன்களை எடுத்தனா். பாக். தரப்பில் பௌலிங்கில் ஹாரிஸ் ரவுஃப் 3-38, அப்பாஸ் அஃப்ரிடி 2-43 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக். அணி களமிறங்கிய நிலையில், தொடக்க பேட்டா்கள் சையும் அயுப் 1, முகமது ரிஸ்வான் 7 ரன்களுடன் வெளியேறி அதிா்ச்சி தந்தனா்.

பின்னா் பாபா் ஆஸம் 66 (2 சிக்ஸா், 7 பவுண்டரி), பாக்கா் ஸமான் 50 (5 சிக்ஸா், 3 பவுண்டரி) சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். அவா்கள் அவுட்டானதும் பாக். தரப்பு ரன் குவிப்பு வேகமும் தடைபட்டது. கேப்டன் ஷாகின் அஃப்ரிடி மட்டுமே கடைசியில் 22 ரன்களை சோ்த்தாா்.

19.3 ஓவா்களில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான்.

நியூஸி தரப்பில் பௌலிங்கில் ஆடம் மில்னே 4-33, பென் சியா்ஸ் 2-28, இஷ்சோதி 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இறுதியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸி. தொடரிலும் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.