மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு 2 ஆண்டுகள் தடைவிதித்தது ஐசிசி!

ஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டாண்டுகள் தடை விதித்துள்ளது ஐசிசி. 

Published On :

ஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டாண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. 

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டை நாசிர் ஹுசைன் ஒப்புக்கொண்டதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கும் அவருக்கு தடை விதித்துள்ளது.

2023 செப்டம்பரில் அவர் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். எமிரேட்ஸ் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி, புதிய ஐபோன் 12-ஐ அன்பளிப்பாக வாங்கிய குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. அதுகுறித்த உரிய விவரங்களை ஊழல் தடுப்பு அதிகாரியிடம் அவர் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு அதிகாரியின் விசாரணைக்கு அவர்  ஒத்துழைக்காததுடன், அதிகாரி கோரிய எந்த தகவல்களையும்  முழுமையாகவும், துல்லியமாகவும் வழங்கவில்லை.

அதனைத் தொடர்ந்து தன்  மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாசிர் ஹுசைன் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி-யின் நிபந்தனைகளை அவர் நிறைவேற்றும்பட்சத்தில் 2025 ஏப்ரல் 7-ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசிர் ஹுசைன் வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 19 டெஸ்ட், 65 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.