இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஷிவம் துபே சிக்ஸர்கள் அடித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. அவரது சிக்ஸர் அடிக்கும் திறன் அந்த இரண்டு போட்டிகளில் தெரிந்தது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவை சேர்க்காமல் ஷிவம் துபேவை சேர்க்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருவருமே சேர்க்கப்பட வேண்டும் என நான் கூறுவேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளின் அடிப்படையில் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்படுவதற்கான கடும் போட்டியாளரே. ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என்றார்.