மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என நினைக்கவில்லை: இங்கிலாந்து வீரர்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 ஜனவரி 2024, 4:29 pm IST

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக முதல் நாள்  ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் போதுமான அளவுக்கு ரன்கள் எத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆடுகளம் முதல் நாளிலேயே சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவானதாக இருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எப்போதும் இதுபோன்று அதிரடியாக விளையாடுவதில்லை. அவர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள் என்றால், ஆடுகளத்தின் தன்மை அடுத்தடுத்த நாள்களில் சிறிது மோசமாக மாறப்போகிறது என நினைக்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.