
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் யார் யார் என்னென்ன பரிசுகள் பெற்றார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
2024-25 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் நேற்று (ஏப்.12) உடன் முடிவடைந்தது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மோகன் பகான் அணி 2-1 என பெங்களூருவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக மோகன் பகான் அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்தவருக்கு தங்கக் காலணி விருது வழங்கப்படுகிறது. சிறந்த வீரருக்கு தங்கப் பந்து விருதும் வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு விருதுகளும் இந்தமுறை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் அலாயெதீன் அஜாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மொராக்காவைச் சேர்ந்த இவர் நார்த் ஈஸ்ட் அணிக்காக ஃபார்வேட் வீரராக விளையாடுகிறார்.
ஐஎஸ்எல்: முழு பரிசு விவரங்கள்
சிறந்த கிராஸ்ரூட் விருது: ஜாம்ஷெட்பூர் எஃப்சி
சிறந்த எலைட் இளம் விருது: பஞ்சாப் எஃப்சி
தங்கக் காலணி: அலாயெதீன் அஜார்
தங்கப் பந்து: அலாயெதீன் அஜார்
தங்க குளோவ்: விஷால் கைத் (மோகன் பகான் )
வளர்ந்துவரும் வீரர்: பிரிசன் ஃபெர்னான்டஸ் (எஃப்சி கோவா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.