
சன்டோஷ் அணியில் கடைசி போட்டியில் அசத்தலாக விளையாடிய நெய்மர் தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.
பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் சமீபத்தில் தனது சிறுவயது கால்பந்து அணியான சன்டோஷ் அணியில் இணைந்தார்.
சௌதி லீக்கில் காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். சமீபத்திய போட்டிய ஒன்றில் ரசிகருடன் கடுமையான வாக்குவாதத்தில் நெய்மர் ஈடுபட்டார்.
இந்நிலையில், கடைசி போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியை 3-1 என வெற்றிப்பெற செய்தார். மொத்தமாக 445 கோல்கள், 257 அசிஸ்ட்ஸ் செய்துள்ளார்.
இந்தப் போட்டியைப் பார்க்க கார்லோ அன்செல்லாட்டியின் குழுவைச் சேர்ந்த சிலர் வந்திருப்பதாகக் கூறப்பட்டது. நெய்மர் உடல்தகுதியுடன் இருந்தால் பிரேசில் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நெய்மரிடம் கேள்விக் கேடகப்பட்டபோது, “நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை” எனக் கூறினார்.
பிரேசிலின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் டோரிவல், “சொந்த அணியினரே நெய்மரின் முக்கியத்துவம் பற்றி அணியில் பேசுகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
தற்போது, புதிய பயிற்சியாளராக ரியல் மாட்ரிட்டின் கார்லோ அன்செலாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.