
இந்திய கால்பந்து மகளிரணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையில் தேர்வாகி அசத்தியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை யு-20க்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் கடைசி போட்டியின் இந்திய அணியும் மியான்மர் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பூஜா 27ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இரண்டாம் பாதியில் மியான்மர் அணி எவ்வளவு முயன்றும் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை.
80-ஆவது நிமிஷத்தில் இந்திய கோல் கீப்பர் மோனா நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
இறுதியில் இந்திய அணி 1-0 என வென்றது. குரூப் டி பிரிவில் இந்திய அணி 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
இதன்மூலம், இந்திய அணி ஆசிய கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தாய்லாந்தில் 2026இல் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு இந்தப் பிரிவில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கால்பந்து ரசிகர்கள் மகளிரணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.