
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் வெஸ் பயஸ் காலமானார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த வெஸ் பயாஸ் (80) இந்திய அணிக்காக ஹாக்கி அணியில் மிட்ஃபீல்டராக விளையாடியுள்ளார்.
ஒலிம்பிக்ஸில் 1972ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெண்கல பதக்கம் வென்றது. இந்த அணியில் இவர் விளையாடியிருந்தார்.
இவர், பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-இல் இவருக்கு ’அன்சங்க் ஹூரோ’ என்ற விருது வழங்கப்பட்டது.
வெஸ் பயஸ் பார்கின்ஸன் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த செவ்வாய்கிழமை இதற்காக வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தியாவின் முன்னாள் கூடைப்பந்து அணியின் கேப்டன் ஜெனிஃபரை இவர் திருமணம் செய்தார். இவரது மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால் இறுதிச் சடங்குகள் தாமதமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஹாக்கி மட்டுமில்லாமல் கால்பந்து, கிரிக்கெட், ரக்பி என பல விளையாட்டுகளை டிவிஷன் அளவில் விளையாடியுள்ளார். இந்திய ரக்பி அணியின் தலைவராக 1996 - 2002 வரை பணியாற்றியுள்ளார்.
கோவாவில் பிறந்த இவர் மருத்துவராக இந்திய அணியில் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஈஸ்ட் பெங்கால் அணிக்கு மருத்துவராகவும் பணியாற்றினார்.
பிசிசிஐ, டேவிஸ் கோப்பை, ஆசிய கோப்பையில் மருத்துவ நிபுணராகவும் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.