பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

சௌதி சூப்பர் கோப்பை: ரொனால்டோ உதவியால் அல்-நாஸர் இறுதிக்கு முன்னேற்றம்!

அல்-நாஸர் அணி அரையிறுதியில் வென்றது குறித்து...

Al Nassr's Cristiano Ronaldo, left, passes the ball during the Saudi Super Cup semi finals.

பாஸ் செய்த ரொனால்டோ, கோல் அடித்த மகிழ்ச்சியில் அல்-நாஸர் அணியினர்... - படங்கள்: எக்ஸ் / அல்-நாஸர்

Published On :

அல்-நாஸர் அணி சௌதி சூப்பர் கோப்பை அரையிறுதியில் 2-1 என வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள ஹாங்காங் ஸ்டேடியம் எனும் திடலில் அல்-இத்திஹாத் அணியும் அல்-நாஸர் அணியும் மோதின.

இந்தப் போட்டியின் 10-ஆவது நிமிஷத்தில் அல்-நாஸர் அணியின் சடியோ மானே கோல் அடித்து அசத்தினார். அதற்கு பதிலடியாக அல்-இத்திஹாத் கிளப் 16-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது.

1-1 என சமநிலையில் இருக்க, 25-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுத்து சடியோ மானே வெளியேற்றப்பட்டார். இதனால், அல்-நாஸர் 10 வீரர்களுடன் விளையாடியது.

முதல் பாதியில் இரு அணியும் 1-1 சமநிலையில் இருக்க, இரண்டாம் பாதியில் அல்-நாஸர் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இந்தப் போட்டியின் 61-ஆவது நிமிஷத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ செய்த அசிஸ்ட்டால் அந்த அணியின் ஜாவோ பெலிக்ஸ் கோல் அடித்தார்.

ரொனால்டோ நினைத்திருந்தால் அதை அவரே கோல் அடித்திருக்கலாம். இருப்பினும் தனது அணி வீரரின் முதல் கோல் அடிக்க அவர் உதவியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

90+5-ஆவது நிமிஷம் வரை போராடியும் அல்-இத்திஹாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், அல்-நாஸர் அணி 2-1 என வெற்றி பெற்றது.

சௌதி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அல்-நாஸர் அணியுடன் வரும் சனிகிழமை (ஆக.23) அல்-கத்சியா எஃப்சி அல்லது அல்-அஹ்லி சவுதி அணி மோதவிருக்கிறது.

Summary

Al-Nassr won the Saudi Super Cup semi-final 2-1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.