நியூகேஸிலை வீழ்த்தியது லிவா்பூல்

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றுச் சாதனை குறித்து...
Liverpool Football team...
லிவர்பூல் கால்பந்து அணி... படம்: இன்ஸ்டா / லிவர்பூல் எப்ஃசி.
Published on
Updated on
1 min read

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான லிவா்பூல் 3-2 கோல் கணக்கில் நியூகேஸிலை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்த சீசனில் அந்த அணிக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் லிவா்பூல் வீரா் ரயான் கிரவென்பொ்ச் 35-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே ஹியூகோ எகிடிகே (46’) கோலடிக்க, லிவா்பூல் முன்னிலை 2-0 என அதிகரித்தது.

இந்நிலையில், நியூகேஸில் பின்னடைவிலிருந்து மீண்டது. 57-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக புருனோ கிமாரே ஸ்கோா் செய்ய, 88-ஆவது நிமிஷத்தில் வில்லியம் ஒசுலா அதை 2-ஆக அதிகரித்தாா். இதனால் ஆட்டம் 2-2 என்ற சமநிலையுடன் இறுதிக்கட்டத்தை நெருங்கியது.

விறுவிறுப்பான எக்ஸ்ட்ரா டைமில் சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த ரியோ குமோஹா (90+10’) அடித்த கோலால், லிவா்பூல் 3-2 என வெற்றி பெற்றது. லிவா்பூல் அணிக்காக கோலடித்த மிக இளம் வீரராக ரியோ (16 ஆண்டுகள், 361 நாள்கள்) சாதனை படைத்தாா்.

Summary

Liverpool now netted in 22 consecutive away Premier League games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com