கேப்டன் ஹாட்ரிக்: ஆசிய கோப்பையில் வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

ஆசிய கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி குறித்து...
Indian Hockey Team
இந்திய அணியினர். படம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா.
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் 4-3 என த்ரில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

ஆடவருக்கான 12-ஆவது ஹாக்கி ஆசிய கோப்பை போட்டிகள் பிகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் ஏ பிரிவில் இருக்கும் இந்தியாவும் சீனாவும் மோதின.

இந்தப் போட்டியில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 20, 33, 47-ஆவது நிமிஷங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

சீன அணியில் 12, 35, 42-ஆவது நிமிஷங்களில் ஸ்கோர் செய்தார்கள்.

இந்தியாவின் ஜுகார்ஜ் சிங் 18-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்திருந்தார். மொத்தமாக 4-3 என இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

Summary

Skipper Harmanpreet Singh converted a hat-trick of penalty corners as India opened their Asian Cup hockey campaign with a 4-3 win over China in a Pool A match here on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com