
17 ஆண்டுகளில் முதல்முறையாக தஜிகிஸ்தான் அணியை இந்திய கால்பந்து அணி வீழ்த்தியுள்ளது.
சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைத் தொடரில் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மத்திய ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைத் தொடரில் குரூப் பி அணியில் இந்தியாவும் தஜிகிஸ்தானும் நேற்று இரவு மோதின.
இந்தப் போட்டியில் இந்திய அணி 2-1 என வென்றது. போட்டியின் 5-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் அன்வர் அலியும் 13-ஆவது நிமிஷத்தில் சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து அசத்தினார்கள்.
தஜிகிஸ்தானின் சாஹ்ரோம் 23-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.
குறிப்பாக தஜிகிஸ்தான் அணியினர் பலமுறை கோல் அடிக்க முயன்றும் இந்தியாவின் கோல் கீப்பர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.