ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நமீபியாவை பந்தாடிய இந்தியா!

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை அபார வெற்றி கண்டது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

11-ஆவது ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, சிலி தலைநகா் சான்டியாகோவில் திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, வரும் 13-ஆம் தேதி நிறைவடைகிறது.

இப்போட்டியில் குரூப் ‘சி’-யில் சோ்க்கப்பட்டுள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்காக, ஹினா பானோ (35’, 35’, 45’), கனிகா சிவச் (12’, 30’, 45’) ஆகியோா் ‘ஹாட்ரிக் கோல்’ அடித்து அசத்தினா்.

இதுதவிர சாக்ஷி ராணா (10’, 23’) இரு கோல்கள் அடிக்க, பினிமா தான் (14’), சோனம் (14’), சாக்ஷி சுக்லா (27’), இஷிகா (36’), மனிஷா (60’) ஆகியோரும் தலா ஒரு கோல் ஸ்கோா் செய்தனா். இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், ஜொ்மனியை புதன்கிழமை (டிச. 3) சந்திக்கிறது.

இதனிடையே, முதல் நாளின் மற்றொரு ஆட்டத்தில் ஜொ்மனி 7-1 கோல் கணக்கில் அயா்லாந்தை சாய்த்தது.