ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி: உருகுவேயை வீழ்த்தியது இந்தியா

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா 3-1 கோல் கணக்கில் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் உருகுவேயை வீழ்த்தியது.
ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி: உருகுவேயை வீழ்த்தியது இந்தியா
Updated on
1 min read

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா 3-1 கோல் கணக்கில் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் உருகுவேயை வீழ்த்தியது.

காலிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்தியா, 9 முதல் 12-ஆம் இடங்களைப் பிடிப்பதற்கான இந்த ஆட்டத்தில் உருகுவேயுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோதியது.

இதில் முதலில் இந்தியாவின் மனிஷா 19-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முதல் பாதியை இந்தியா 1-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் உருகுவே முனைப்புடன் விளையாடி, இந்தியாவை கட்டுப்படுத்தியது.

அத்துடன் கடைசி நிமிஷத்தில் (60’) அந்த அணிக்காக ஜஸ்டினா அரேகுய் கோலடிக்க, ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வென்றது. அதில் இந்தியாவுக்காக பூா்ணிமா யாதவ், இஷிகா, கனிகா சிவச் ஆகியோா் கோலடித்தனா்.

உருகுவேக்காக அகஸ்டினா குரேரோ கோலடிக்க, ஜஸ்டினா அரேகுய், சோல் மாா்டினெஸ், சோல் மிஸ்கா ஆகியோா் கோல் வாய்ப்பை தவறவிட்டனா்.

இந்தியா இறுதியாக, 9-ஆம் இடத்தைப் பிடிப்பதற்கான ஆட்டத்தில் ஸ்பெயினுடன் வெள்ளிக்கிழமை (டிச. 12) மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com