

உலகின் நம்.1 இடத்தில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா (27 வயது) - 2022 விம்பிள்டனில் இரண்டாம் இடம் பிடித்த நிக் கிர்ஜியோஸை (30 வயது) எதிர்த்து விளையாடுகிறார்.
துபையில் வரும் டிச.28ஆம் தேதி நடைபெறும் இந்த நட்பு ரீதியான போட்டியை பிபிசி, ஸ்கை ஸ்போர்ட்ஸில் நேரலையில் பார்க்கலாம்.
இந்தப் போட்டி பலரிடையே விவாதத்தை உண்டாக்கிய நிலையில் சபலென்கா கடுமையாக மறுத்துள்ளார். இது குறித்து அரினா சபலென்கா பிபிசியிடம் கூறியதாவது:
பெண்களும் வலுவானவர்கள்தான் என நிரூபிப்பேன்
இதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். என்னை எந்தவிதமான அபாயத்தில் தள்ளமாட்டேன். நாங்கள் மகிழ்ச்சியாக, அற்புதமான டென்னிஸ் போட்டியை மக்களுக்கு தருவோம். யார் வெற்றிபெற்றாலும் போட்டி சிறப்பாக இருக்கும்.
ஆண்கள் பிறப்பு ரீதியாகவே பெண்களை விட வலுவானவர்களாக இருப்பார்கள். ஆனால், இங்கு அது மட்டுமே முக்கியமானதில்லை. இந்த நிகழ்வு மகளிர் டென்னிஸை உயர்ந்த இடத்துக்கு கொண்டுவரும்.
இந்தப் போட்டி கிர்ஜியோஸுக்கு எளிதானதாக இருக்காது. பெண்கள் வலுவானவர்கள் என்பதை நல்ல என்டர்டெயின்மென்ட் மூலம் நிரூபிப்பேன்.
அவர் தோல்வி - தோல்வி சூழ்நிலையிலும் நான் வெற்றி - வெற்றி சூழ்நிலையிலும் இருக்கிறேன் என்றார்.
1973-இல் நடந்த சம்பவம்...
இதற்கு முன்பாக 1973-இல் பில்லி ஜீன் கிங், பாபி ரிக்ஸை எதிர்த்து விளையாடினார். பாலின மோதல் - ‘பேட்டில் ஆஃப் தி செக்ஸஸ்’ என்ற பெயரில் விளையாடினார்கள்.
இந்தப் போட்டி தொலைக்காட்சியில் 90 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
இந்தப் போட்டியில் பில்லி ஜீன் கிங் வென்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஆடவர் - மகளிர் மோதல் தேவையற்ற ஒன்று என பலரும் விவாதித்து வருகிறார்கள்.
கிர்ஜியோஸ் ஆணாதிக்கவாதியா?
இந்த கிர்ஜியோஸ் கடந்த 2021-இல் முன்னாள் காதலியை அடித்ததன் மூலம் ஆணாதிக்கவாதி என விமர்சிக்கப்பட்டார்.
தற்போது, தான் மிகவும் பக்குவடைந்துவிட்டதாக அவர் பேட்டியில் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.