

ரோஹித் சர்மா, விராட் கோலியின் சம்பளம் குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தத்தின்படி, டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் (A+) தரவரிசையில் இருப்பர்.
ஆனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரையும் ஏ பிளஸ் வரிசையிலிருந்து ஏ அல்லது அதற்குக் கீழான வரிசைக்கு கீழிறக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வரும்நிலையில், ஏ வரிசைக்குக் கீழிறக்கப்பட்டால், அவர்களின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.
கிரிக்கெட் வாரியத்தின் இந்தக் கொள்கை, வீரர்களின் போட்டித் தொகையையோ கிரிக்கெட்டில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயரையோ எந்த வகையிலும் பாதிக்காது.
அதுமட்டுமின்றி, மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் வரிசைக்கு முன்னேறவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்து, டிசம்பர் 22 ஆம் தேதியில் பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 10 லட்சம் மட்டுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.