துரோகத்தின் நினைவுச் சின்னம்... ஃபிஃபா-வை விமர்சிக்கும் கால்பந்து ஆதரவாளர்கள்!

2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகளின் விலை குறித்து...
Palestinians watch a live broadcast of the FIFA Arab Cup quarterfinal soccer match, between Palestine and Saudi Arabia, played in Qatar, at a coffee shop in Deir al-Balah, in the central Gaza Strip,
கால்பந்துப் போட்டிகளைப் பார்க்கும் பாலஸ்தீனர்கள். படம்: ஏபி
Updated on
1 min read

கால்பந்து உலகக் கோப்பை டிக்கெட்டுகளின் விலை அதிகமாக விற்கப்படுவதால் அதன் ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.

இதனால், கால்பந்து ஆதரவாளர்கள் ஃபிஃபா அமைப்பினை ’துரோகத்தின் நினைவுச் சின்னம்’ என விமர்சித்து வருகிறார்கள்.

48 அணிகள் பங்கேற்கும் 2026 உலகக் கோப்பை

முதல்முறையாக 48 நாடுகள் (அணிகள்) 2026 உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் அடுத்தாண்டு தொடங்கும் இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விலை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தமுறை டிக்கெட்டின் விலையில் 8 சதவிகிதம் அந்ததந்த அணிகளுக்கே தரப்படுமெனக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவரது ரசிகர்கள் விஸ்வாசத்தினை கௌரவிக்கும் விதமாக இந்த நடைமுறை எனக் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு விலை?

ஜெர்மனி கால்பந்து கழகம் வெளியிட்டுள்ள டிக்கெட்டுகளின் விலை விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் ஸ்டேஜ் போட்டிகளுக்கு அமெரிக்க டாலர் 180 - 700 வரையிலான டிக்கெட்டுகள் விற்கப்படும். இறுதிப் போட்டிக்கு அமெரிக்க டாலர் 4,185 - 8,680 வரை இருக்குமெனத் தெரிவித்துள்ளது.

ஏழாண்டுக்கு முன்பாக தொடக்க போட்டிகளுக்கு 21 டாலரில் இருக்குமென அமெரிக்க அரசு கூறியிருந்தது.

தற்போது, ஃபிஃபா 60 டாலருக்கு விற்குமெனக் கூறுவதும் மிகுந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்து கால்பந்து கழகம் விலை குறித்து அறிவித்துள்ளது. அதில் இறுதிப் போட்டிவரை டிக்கெட் வாங்கினால் 7,000 டாலருக்கு இருக்குமெனத் தெரிவித்துள்ளது.

எஃப்எஸ்இ விமர்சனம்

எஃப்எஸ்இ (ஐரோப்பிய கால்பந்து ஆதரவாளர்கள்) இது சட்டத்துக்கு புறம்பான பணத்தை அபகரிக்கும் செயல் எனக் கூறியுள்ளது.

அதன் அறிக்கையில், “உலகக் கோப்பையின் பாரம்பரியத்தில் இது வஞ்சகத்தின் நினைவுச் சின்னம். பார்வையாளர்களுக்காக ஆதரவாளர்களைப் புறந்தள்ளியுள்ளார்கள்” எனக் கூறியுள்ளது

ஃபிஃபா கடந்த செப்டம்பரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளுக்கு குறைந்தபட்சம் 60 டாலர் முதல் இருக்குமெனவும் இறுதிப்போட்டிக்கு 6,730 டாலர் முதல் தொடங்குமெனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த விலை மாற்றப்படக்கூடியது எனத் தெரிவித்திருந்தது. கால்பந்து ரசிகர்கள் ஃபிஃபாவின் விலை ஏற்றத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மெஸ்ஸி - ரொனால்டோ மோதல்

ஃபிஃபா 4 வகையான டிக்கெட்டுகள் இருக்குமென கூறிய நிலையில் ஜெர்மனி கால்பந்து அமைப்பு 3 விதமான வகைமை எனக் கூறியுள்ளது.

மெஸ்ஸியும் ரொனால்டோவும் காலிறுதியில் மோதும் வாய்ப்பு இருப்பதால் அந்தப் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகமாக இருக்குமென கணிக்கப்படுகிறது.

டிக்கெட் விலைகளின் வரம்பு

1994 உலகக் கோப்பையில் 25 - 475 டாலர்

2010 உலகக் கோப்பையில் 80 - 900 டாலர்

2014 உலகக் கோப்பையில் 90 - 990 டாலர்

2018 உலகக் கோப்பையில் 105 - 1,100 டாலர்

2022 உலகக் கோப்பையில் 70 - 1,600 டாலர்

2026 உலகக் கோப்பையில் 60 - 8,680 டாலர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com