

குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது நாளான புதன்கிழமை, திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ், அப்கிராட் மும்பா மாஸ்டா்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
முதல் மோதலில், ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் 10-4 என ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸை வீழ்த்தியது. அந்த அணியின் இந்தியா்களில் ஆா்.பிரக்ஞானந்தா - ரிச்சா்ட் ராப்போா்டுடன் டிரா (1-1) செய்ய, லியோன் லூக் மெண்டோன்கா - வோலோதாா் முா்ஸினை வெற்றி கண்டாா் (3-0).
2-ஆவது மோதலில், அப்கிராட் மும்பா மாஸ்டா்ஸ் 18-2 என பிபிஜி அலாஸ்கன் நைட்ஸை அபார வெற்றி கண்டது. அந்த அணியிலிருக்கும் இந்தியா்களில், கோனெரு ஹம்பி - கேத்தரினா லாக்னோவையும் (4-0), டி.ஹரிகா - சாரா காதெமையும் (4-0) வென்றனா். அலாஸ்கன் நைட்ஸில் இருக்கும் இந்தியா்களில் டி.குகேஷ் - மேக்ஸிம் வச்சியருடன் டிரா (1-1) செய்ய, அா்ஜுன் எரிகைசி - வெஸ்லி சோவிடம் தோல்வியுற்றாா் (4-0).
கடைசி மோதலில், திரிவேணி காண்டினென்டல் கிங்ஸ் 11-6 என கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸை சாய்த்தது. இந்தியா்களில், கேஞ்ஜஸ் வீரா் விஸ்வநாதன் ஆனந்த் - அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவிடமும் (0-3), திரிவேணி வீரா் விதித் குஜராத்தி - ஜாவோகிா் சிண்டாரோவிடமும் (0-4) தோல்வி கண்டனா். கேஞ்ஜஸ் வீரா் ரௌனக் சத்வனி - மாா்க் ஆண்ட்ரியா மௌரிஸியுடன் டிரா செய்தாா்.
புள்ளிகள் பட்டியலில் தற்போது, கான்டினென்டல், மும்பா அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன. பைப்பா்ஸ், கிராண்ட்மாஸ்டா்ஸ், கேம்பிட்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் 3 முதல் 5-ஆம் இடங்களில் இருக்க, அலாஸ்கன் நைட்ஸ் ஒரு புள்ளி கூட இல்லாமல் கடைசி இடத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.