

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் இன்று (டிச. 19) நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அபிஷேக் சர்மா 34(21 பந்துகள்), சஞ்சு சாம்சன் 37(22 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா, கேப்டன் சூர்ய குமார் யாதவ், உள்ளே வந்தனர்.
சூர்ய குமார் யாதவ் ஏமாற்றமளித்ததை தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா களம் கண்டார். பிறகு திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இணை ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர்.
இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முடிவில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான டி காக் அதிரடியாக விளையாடி, 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 18 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.
இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 1 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிக்க | ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.