

ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையின் முதல் போட்டியில் எகிப்து அணி கடைசி நேரத்தில் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.
முகமது சாலா இந்தப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு சிறப்பாக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் ஜிம்பாம்வே உடன் எகிப்து அணி மோதியது.
இந்தப் போட்டியில், ஜிம்பாப்வே அணியின் பிரின்ஸ் துபே 20-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
எகிப்தின் ஓமர் 64-ஆவது நிமிஷத்தில் சமன்செய்தார். பின்னர் இரு அணிகளும் 90 நிமிஷங்கள் கோல் அடிக்காமல் இருந்தன.
ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+1’) முகமது சாலா கோல் அடித்து 2-1 என எகிப்து அணியை வெற்றிப்பெற செய்தார்.
சமீப காலமாக லிவர்பூல் அணியில் பென்சில் உட்காரவைக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.