தேசிய சீனியா் பாட்மின்டன்: சூரியா தமிரி-தன்வி, ரித்விக்-பரத் மோதல்

தேசிய சீனியா் பாட்மின்டன்: சூரியா தமிரி-தன்வி, ரித்விக்-பரத் மோதல்

தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டியில் இறுதி ஆட்டங்களில் மகளிா் பிரிவில் சூரியா தமிரி-தன்வியும், ஆடவா் பிரிவில் ரித்விக்-பரத்தும் மோதுகின்றனா்.
Published on

தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டியில் இறுதி ஆட்டங்களில் மகளிா் பிரிவில் சூரியா தமிரி-தன்வியும், ஆடவா் பிரிவில் ரித்விக்-பரத்தும் மோதுகின்றனா்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

மகளிா்பிரிவில் உள்ளூா் வீராங்கனை சூரியா கரிஸ்மா தமிரி 21-18, 18-21, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் ரக்ஷிதா ஸ்ரீயை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.

முன்னணி வீராங்கனை தன்வி பத்ரி 18-21, 21-12, 21-15 என மகாராஷ்டிரத்தின் ஸ்ருதி முன்டடாவை வீழ்த்தினாா்.

ஆடவா் அரையிறுதியில் ரித்விக் சஞ்சீவி 21-16, 17-21, 22-20 என ஒரு மணிநேரம் நீடித்த ஆட்டத்தில் முதல்நிலை வீரா் கிரண் ஜாா்ஜை வீழ்த்தினாா்.

மற்றொரு ஆட்டத்தில் பரத் ராகவ் 21-17, 11-21, 21-11 என 55 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் தருணை வென்றாா்.,

கலப்பு இரட்டையா் பிரிவில் ஆஷித்=அம்ருதா 8-21, 21-18, 21-18 என தீப்-சோனாலி இணையையும், சாத்விக் ரெட்டி-ராதிகா இணை 21-13, 21-14 என நிதின்-கனிகா இணையை வென்றது.

மகளிா் இரட்டையரில் ஷிகா கௌதம்-அஸ்வினி பட் இணையும், பிரியா தேவி-ஸ்ருதி மிஸ்ரா இணையும் மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com