ஆர்செனல் - சிட்டி - ஆஸ்டன் வில்லா... பிரீமியர் லீக்கில் மும்முனைப் போட்டி!

பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகள் குறித்து...
Arsenal, Manchester City, and Aston Villa players.
ஆர்செனல், மான்செஸ்டர் சிட்டி, ஆஸ்டன் வில்லா வீரர்கள். படங்கள்: எக்ஸ் / ஆர்செனல், மான்செஸ்டர் சிட்டி, ஆஸ்டன் வில்லா.
Updated on
1 min read

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகளில் கோப்பை வெல்லப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

தற்போதைக்கு மும்முனைப் போட்டியாக அமைந்துள்ளது. ஆர்செனல் - மான்செஸ்டர் சிட்டி - ஆஸ்டன் வில்லா ஆகிய அணிகள் ஒன்றையொன்று முந்தி வருகின்றன.

நேற்றைய பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என நியூ கேஷ்டல் அணியை வீழ்த்தியது.

மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என நொட்டிங்கம் ஃபாரஸ்ட் அணியை வீழ்த்தியது.

நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணி 2-1 என ஓல்விஸ் அணியை வீழ்த்தியது.

ஆர்செனல் 2-1 என பிரைடன் அணியை வீழ்த்த, ஆஸ்டன் வில்லா செல்ஸியை 2-1 என வீழ்த்தி அசத்தியது.

ஆஸ்டன் வில்லா அணி தொடர்ச்சியாக 11 வெற்றிகள் பெற்று அந்த கிளப்பின் அதிகபட்ச வெற்றியை சமன்செய்துள்ளது.

பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்

1. ஆர்செனல் - 42 புள்ளிகள்

2. மான்செஸ்டர் சிட்டி - 40 புள்ளிகள்

3. ஆஸ்டன் வில்லா - 39 புள்ளிகள்

4. லிவர்பூல் - 32 புள்ளிகள்

5. செல்ஸி - 29 புள்ளிகள்

6. மான்செஸ்டர் யுனைடெட் - 29 புள்ளிகள்

Summary

The uncertainty continues regarding who will win the trophy in the Premier League football matches held in England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com