

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விடியோவிற்கு வாரணாசி பட பாடலை இணைத்து ரீல்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
ஜுவென்டஸ் அணி இந்த விடியோவை வெளியிட்டுள்ளது. தென்னிந்திய ரசிகர்களிடம் இந்த விடியோ கவனம் ஈர்த்து வருகிறது.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணியில் விளையாடினார். பின்னர், இத்தாலியின் முன்னணி கிளப்பான ஜுவென்டஸ் அணிக்கு ரூ. 849 கோடிக்கு (123.24 மில்லியன் டாலர்) மாறினார்.
தற்போது, சௌதி புரோ லீக்கில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
2018–2021 வரை ஜுவென்டஸ் அணியில் விளையாடினார். அங்கு 98 போட்டிகளில் 81 கோல்கள் அடித்து அசத்தினார்.
மிருகம் மாதிரி விளையாடிய ரொனால்டோவின் விடியோக்களை இணைத்து வாரணாசி படத்தின் பிரளயம் பிரளயம் எனும் வில்லன் பாடலுடன் இணைத்து ஜுவென்டஸ் அணி விடியோ வெளியிட்டுள்ளது.
மெயின் கேரக்டர் எனர்ஜியுடன் 2025 முடிவடைகிறது என இந்த விடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அல் -நாசர் அணியில் நேற்றைய போட்டியிலும் ரொனால்டோ கோல் அடித்தார். இதன்மூலம் அல்-நாசர் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
இத்துடன் 957 கோல்களை அடித்துள்ள அவர் சமீபத்திய விருது நிகழ்வில், “என்னுடைய கனவான 1000 கோல்களை விரைவில் நிறைவேற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.