
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 925ஆவது கோலை அடித்து அசத்தினார்.
சௌதி புரோ லீக் போட்டியில் அல் நசீர் அணியில் ரொனால்டோ விளையாடி வருகிறார்.
இந்தத் தொடரில் அல் நசீர் அணி அல் வெகிதா அணியுடன் மோதியது. இதில் அல் நசீர் அணி 2-0 என வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ தனது 925ஆவது கோலை போட்டியின் 48ஆவது நிமிஷத்தில் அடித்தார்.
அடுத்ததாக 90+7ஆவது நிமிஷத்தில் ரொனால்டோ அடித்த பந்துக்கு பெனால்டி கிடைத்தது. 1,000 கோல்கள் அடிக்க இன்னும் 75 கோல்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாய்ப்பை அணியின் சக வீரர் சடியோ மனேவிற்கு விட்டுக்கொடுத்தார்.
சடியோ மனே கடந்த 9 போட்டிகளாக கோல்கள் அடிக்காமல் இருந்ததால் அவருக்காக இந்த வாய்ப்பு வழங்கிய ரொனால்டோவின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
வழக்கமாக அதிகமாக பெனால்டி கோல் அடிப்பதில் பிரபலமானவர் ரொனால்டோ. ஆனால், இந்த முறை அணியினருக்காக விட்டுக்கொடுத்த செயல் அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.