வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா லெஜெண்ட்! ஒப்பந்தம் நிராகரிப்பு?

இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா வீரர் குறித்து...

News image

ஜவி எர்னான்டெஸ் - படம்: ஏபி

Updated On :25 ஜூலை 2025, 3:59 pm IST

இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா லெஜெண்ட் ஜவிக்கு அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய ஆடவர் கால்பந்து அணி மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணி ஃபிஃபா தரவரிசையில் 133-ஆவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் சமீபத்தில் வெளியேறினார். அவருடைய ஓராண்டு காலத்தில் 8 போட்டிகளில் 1-இல் மட்டுமே வென்றிருந்தது.

அடுத்ததாக யாரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தப் பதவிக்கு 8 முறை லா லீகா வென்ற பார்சிலோனா லெஜெண்ட் ஜவி விண்ணபித்துள்ளார்.

இந்திய கால்பந்து போட்டிகளை கவனிக்கும் ஜவி

சமீபத்தில் ஜெவி ஒரு பேட்டியில், “நான் அதிகமாக லா லீகா போட்டிகளையும் பிரீமியர் லீக்கையும் பின் தொடர்வேன். பிரெஞ்சு போட்டிகளை பார்க்காவிட்டாலும் எப்போதாவது பிஎஸ்ஜி, மார்செல்லி போட்டிகளைப் பார்ப்பேன்.

இத்தாலியில் கோமோ. ஏனெனில் அங்கு என் நண்பர் இருப்பார்கள். சௌதி, கத்தாரிலும் நண்பர்கள் நல்ல நண்பர்கள் இருப்பதால் அதையும் அடிக்கடி பார்ப்பேன்.

எனக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். அதனால், அதிகமாக பார்க்கிறேன். பனாமாவையும் பார்க்கிறேன். சில நேரங்களில் ஐஎஸ்எல் போட்டிகளைப் பார்க்கிறேன், ஏனெனில் அங்குதான் ஸ்பானிஷ் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்” என்றார்.

சோகத்தில் இந்திய ரசிகர்கள்

பார்சிலோனாவில் ஜவி 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 81 கோடி) சம்பளமாக பெற்றுவந்தார். கடந்த 2023/24 சீசனில் அவர் அந்த அணியை விட்டு விலகினார்.

இந்தப் பதவிக்கு அவருக்குக் கூடுதல் சம்பளம் தரப்பட வேண்டுமென இந்திய கால்பந்து கூட்டமைப்பு மறுத்துவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜவியை ஏற்க இந்திய கூட்டமைப்பு ஏற்க மறுத்ததால் இந்திய கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

யாராவது லெஜெண்ட்டுகள் வந்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என கால்பந்து ரசிகர்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.