உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு கார் பரிசளித்த அதிபர்..! முதல்முறை உலகக் கோப்பை தகுதிக்கு வெகுமதி!

உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு குறித்து...
Players and officials of Uzbekistan national team, who achieved a historic result by securing a spot in the World Cup, were awarded
உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு கார் பரிசளித்த அதிபர்.படங்கள்: எக்ஸ் / UzbekistanFA
Published on
Updated on
1 min read

கால்பந்து உலகக் கோப்பையில் முதல்முறையாக தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் சொகுசு கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 48 நாடுகளின் அணிகள் தேர்வாக இருக்கின்றன. இதுவரை 13 நாடுகள் தேர்வாகியுள்ளன.

இந்தமுறை முதல்முறையாக உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வரலாற்றுச் சாதனைக்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் 40 பிஒய்டி எலெக்ட்ரிக் கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்பாக ஆசிய கோப்பை 2023-இல் யு-20 பிரிவில் உஸ்பெகிஸ்தான் கோப்பை வெல்லும்போது இதே அதிபர் 33 கார்களை பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

கால்பந்து வரலாற்றில் பிரேசில் அணி மட்டுமே அனைத்து உலகக் கோப்பை போட்டிகளில் தகுதிபெற்ற ஒரே அணியாக இருப்பதும், இந்திய அணி இதுவரை ஒருமுறைக் கூட தகுதிபெறாததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com