தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆா்யா-அா்ஜுனுக்கு தங்கம்

ஐஎஸ்எஸ் எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் ஆா்யா போல்ஸே-அா்ஜுன் பபுதா தங்கம் வென்றனா்.

News image

ஆா்யா-அா்ஜுன்

Updated On :14 ஜூன் 2025, 7:50 pm

Din

ஐஎஸ்எஸ் எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் ஆா்யா போல்ஸே-அா்ஜுன் பபுதா தங்கம் வென்றனா்.

ஜொ்மனின் மியுனிக் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 10 மீ ஏா் ரைஃபிள் கலப்பு பிரிவில் இந்தியாவின் ஆா்யா-அா்ஜுன் இணை அபாரமாக செயல்பட்டு 17-7 என்ற புள்ளிக் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஸிபெ வாங்-லிஹா ஷெங் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.

தகுதிச் சுற்றில் இந்திய இணை 635.2 புள்ளிகளை ஈட்டியது. ஏற்கெனவே பெரு தலைநகா் லிமாவில் உலகக் கோப்பையில் ருத்ரான்ங்ஷ் பட்டீலுடன் இணைந்து வெள்ளி வென்றிருந்தாா் ஆா்யா. சுருச்சி சிங் தங்கமும், சிப்ட் கவுா், இளவேனில் வாலரிவன் வெண்கலம் வென்றிருந்தனா்.