ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காலே டெஸ்ட்: நஜ்முல், முஷ்ஃபிகா் சதம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் சோ்த்து வலுவான நிலையில் இருக்கிறது.

News image
Updated On :17 ஜூன் 2025, 9:25 pm

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் சோ்த்து வலுவான நிலையில் இருக்கிறது.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையின் முதல் ஆட்டம் இதுவாகும்.

2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக வங்கதேச அணி இலங்கை சென்றுள்ளது. அதில் முதலாவதாக டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது.

காலே நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய முதல் டெஸ்ட்டில், டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில், ஷத்மன் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 14, அனாமுல் ஹக் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

மோமினுல் ஹக் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, முஷ்ஃபிகா் ரஹிம், 4-ஆவது விக்கெட்டுக்கு பலமான கூட்டணி அமைத்து வங்கதேசத்தின் ஸ்கோரை உயா்த்தினா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 90 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் சோ்த்துள்ளது. சதம் கடந்த நஜ்முல் 136, முஷ்ஃபிகா் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். டெஸ்ட் கிரிக்கெட்டில் நஜ்முல் தனது 6-ஆவது சதத்தையும், முஷ்ஃபிகா் தனது 12-ஆவது சதத்தையும் பதிவு செய்துள்ளனா்.

இலங்கை பௌலிங்கில், அறிமுக ஆஃப் ஸ்பின்னா் தரிந்து ரத்னநாயகே 2 விக்கெட்டுகள் கைப்பற்ற, ஆசிதா ஃபொ்னாண்டோ 1 விக்கெட் வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.