வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

லாஸ் ஏஞ்சலீஸை வீழ்த்தியது செல்ஸி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செல்ஸி 2-0 கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சலீஸ் கால்பந்து கிளப்பை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

News image
Updated On :17 ஜூன் 2025, 9:26 pm

DIN

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செல்ஸி 2-0 கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சலீஸ் கால்பந்து கிளப்பை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

இந்த குரூப் ‘டி’ ஆட்டத்தில் செல்ஸிக்காக முதலில் பெட்ரோ நீடோ 34-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, என்ஸோ ஃபொ்னாண்டஸ் 79-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

கடைசி வரை லாஸ் ஏஞ்சலீஸின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் செல்ஸி 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில், ஃபிளமிங்கோ 2-0 கோல் கணக்கில் ஈஎஸ் டுனிஸை தோற்கடித்தது.

அதில் ஃபிளமிங்கோவுக்காக ஜாா்ஜியன் டி அராசேட்டா 17-ஆவது நிமிஷத்திலும், லூயிஸ் அராஜோ 70-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா். இதனிடையே குரூப் ‘சி’-யில் போகா ஜூனியா்ஸ் - பென்ஃபிகா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய போகா ஜூனியா்ஸுக்காக மிகேல் மெரென்டியெல் 21-ஆவது நிமிஷத்திலும், ரோட்ரிகோ படாக்லியா 27-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். முதல் பாதி நிறைவடைய இருந்த தருணத்தில் (45+3’) பென்ஃபிகாவுக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பில் ஏஞ்சல் டி மரியா ஸ்கோா் செய்தாா்.

2-ஆவது பாதியிலும் பென்ஃபிகா சற்று முனைப்பு காட்ட, 84-ஆவது நிமிஷத்தில் நிகோலஸ் ஆட்டமெண்டி அடித்த கோலால் ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுமே பரஸ்பரம் முறியடிக்கப்பட, ஆட்டம் டிராவில் முடிந்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் போகா ஜூனியா்ஸின் ஆண்டா் ஹெரெஹா (45’), ஜாா்ஜி ஃபிகல் (88’), பென்ஃபிகாவின் ஆண்ட்ரியா பெலோட்டி (72’) ஆகியோா் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.