Ben Stokes flips a coin. Indian captain Shubman Gill is nearby.
நாணயத்தைச் சுழற்றும் பென் ஸ்டோக்ஸ். அருகில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில். படம்: பிசிசிஐ

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: செஷன்களின் இந்திய நேரம்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் செஷன்களின் இந்திய நேரம் குறித்து...
Published on

இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும்போது இந்திய நேரப்படி எப்போது விளையாடுகிறது என்ற குழப்பம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுவது வழக்கமானதுதான்.

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 3 செஷன்களின் இந்திய நேரத்தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டிகள் இனிமேல் ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி போட்டிகள் என அழைக்கப்படுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 20) மதியம் நண்பகல் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி உணவு இடைவேளை வரை 92/2 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாளில் மொத்தமாக 3 செஷன்களில் விளையாடுவார்கள். இதேபோல் மொத்தமாக 5 நாள்களில் விளையாடுவார்கள்.

முதல் செஷன்: மதியம் 3.30 - மாலை 5.30

இரண்டாவது செஷன்: மாலை 6.10 - இரவு 8.10

மூன்றாவது செஷன்: இரவு 8.30 - இரவு 10.30

முதல் செஷனில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் நன்றாகவே விளையாடியுள்ளது.

சாய் சுதர்சன் ரன்களே எடுக்காமல் ஆட்டமிழந்ததுதான் இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com