கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஃபிபா உலகக்கோப்பை பரிசுத்தொகை ரூ.8,700 கோடி!

ஃபிபா உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை ரூ.8,700 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிபா உலகக்கோப்பை..

Published On :

ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடும் 32 அணிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா உலககோப்பைக்கா மொத்த தொகை இந்திய மதிப்பில் ரூ.8,700 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வெற்றிபெறும் அணிகள் மற்றும் யார் யாருக்கு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும், ஸ்பான்சர்ஷிப் குறித்த ஒப்பந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டித் தொடரை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட டாஸ்ன் நிறுவனம் இந்தத் தொடருக்கான மொத்தப் போட்டிகளையும் ஒளிபரப்பவிருக்கிறது. டிசம்பரில் தொடங்கும் இந்தத் தொடரில் மொத்தம் 63 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் கோகோ கோலா, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சீன எலக்ட்ரானிக் நிறுவனம், பெல்ஜிய மதுபான நிறுவனமாக ஏபி இன்பேவ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

இந்தாண்டுக்கான பரிசுத் தொகை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபிபா தொடருக்கான தொகையைவிட அதிகமாகும். இந்தப் பரிசுத் தொகை அணியின் செயல் திறனைப் பொருத்து வழங்கப்படவுள்ளது. மேலும் கலந்துகொள்ளும் மொத்த அணிகளுக்கும் சுமார் 575 மில்லியன் டாலர்கள் வரை வழங்கப்படவிருக்கிறது.

அமெரிக்காவில் 12 நகரங்களில் நடைபெறும் 63 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை 500 மில்லியன் டாலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.