சர்வதேச ஒலிம்பிக் ஆணையத் தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் தேர்வு!

சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்டி கோவென்ட்ரி..
கிறிஸ்டி கோவென்ட்ரி..
Published on
Updated on
1 min read

சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144-வது சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் கூட்டத்தில் 10-வது தலைவராக கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவருக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்குள் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 41 வயதான ஜிம்பாப்வே விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த கிறிஸ்டி கோவென்ட்ரி வெற்றி பெற்றார்.

இதையும் படிக்க: ஐபிஎல் 2025: 17 சீசன்களாக நடுவர்; இந்த முறை புதிய அவதாரம்!

2013 ஆம் ஆண்டில் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாக், மீண்டும் 2021 ஆம் ஆண்டில் தலைவரானார். அவருக்குப் பின்னர் கிறிஸ்டி கோவென்ட்ரி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 23 ஆம் தேதி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றப்போகும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் கிறிஸ்டி.

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவரான கிறிஸ்டி, 2033 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் பதவி வகிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com