தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை குற்றச்சாட்டு!

தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்.. விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை குற்றம் சாட்டியுள்ளார்.
தீபக் நிவாஸ் ஹூடா - சாவீட்டி பூரா
தீபக் நிவாஸ் ஹூடா - சாவீட்டி பூரா
Published on
Updated on
1 min read

விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பமாக தனது கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் வீராங்கனை குற்றம் சாட்டி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அர்ஜுனா விருது வென்றவரான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை சாவீட்டி பூரா - கபடி வீரரான தீபக் நிவாஸ் ஹூடா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தீபக் தன்னிடம் வரதட்சினை கேட்பதாக சாவீட்டி காவல் துறையிடம் புகாரளித்திருந்தார். மேலும், தன்னை தாக்குவதால், விவகாரத்து கோரி மனு ஒன்றும் தாக்கல் செய்திருந்தார்.

இவர் விவகாரத்துக்கான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 15 ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இதையும் படிக்க: விவாகரத்து வழக்கு விசாரணை: கணவரைத் தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை!

அப்போது இருவரது குடும்பத்தினர் முன்னிலையிலும் பூரா அவரது கணவரில் கழுத்தைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினார். இந்த விடியோ காட்சிகள் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், அது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது சாவீட்டி பூரா புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டில் தனது கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், அதற்கான விடியோ ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி சாவீட்டி பூரா கூறுகையில், “நான் எனது கணவரைப் பற்றி தவறாக சொல்வதை விரும்பவில்லை. இருந்தாலும், சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அவருக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருக்கிறது.

அவர் பல ஆண்களுடன் இருக்கும் விடியோ ஆதரங்கள் என்னிடம் இருக்கின்றன. இதை பொது இடத்தில் சொல்வதை விரும்பவில்லை. இருந்தாலும், இதை அவர் ஏற்கொள்ள மறுக்கிறார். அவருடைய விடியோக்கள் அனைத்தும் இருக்கிறது. எனது பெற்றோரிடம் கூறுவதற்குகூட சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com