
லிவா்பூல் கால்பந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை லிவா்பூல் எஃப்சி 20-ஆவது முறையாக கைப்பற்றியது. நட்சத்திர வீரா் முகமது சாலா நான்காவது முறையாக ப்ரீமியா் லீக் தங்கக் காலணி விருதை வென்றாா்.
கடைசியாக கடந்த 2020-இல் கரோனா தொற்று பாதிப்பின் போது லிவா்பூல் அணி பட்டத்தை வென்றிருந்தது. இதனால் இந்த வெற்றி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
இந்த வெற்றியைக் கொண்டாட நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிவர்பூர் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
53 வயது நபர் ஒருவர் காரினை கூட்டத்திற்கு இடையே ஓட்டி விபத்தினை ஏற்படுத்தினார்.
இந்த விபத்தின் காணொளியைப் பார்க்கும்போது கார் மோதி சிலர் தூக்கி வீசப்படுகிறார்கள்.
இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 50க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தினை ஏற்படுத்தியவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
காயமுற்ற 27 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் 20 பேருக்கு விபத்து நடந்த இடத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.