முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக்கை பிஎஸ்ஜி வெல்லுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!

இன்டர் மிலன் - பிஎஸ்ஜி மோதும் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டி குறித்து...
UEFA champions league medals and Cups. (pics from X, UEFA)
சாம்பியன்ஸ் லீக் கோப்பை. படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்
Published on
Updated on
1 min read

பிஎஸ்ஜி - இன்டர் மிலன் மோதும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகள் மோதி, தற்போது இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் தேர்வாகியுள்ளன.

Champions League final soccer match in Munich, Germany, (AP Photo/Martin Meissner)
இறுதிப் போட்டி நடைபெறும் திடல்.படம்: ஏபி

ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற அலையன்ஸ் அரினா திடலில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

கடந்த 2020இல் பெயர்ன் மியூனிக் அணியுடன் பிஎஸ்ஜி அணியும் 2023இல் இன்டர் மிலன் மான்செஸ்டர் சிட்டியுடனும் தோல்வியுற்றது.

முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் பிஎஸ்ஜி

கடந்த காலங்களில் பிஎஸ்ஜி அணியில் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்வே ஆகியோரை பல கோடிகள் கொடுத்து எடுத்தும் பிஎஸ்ஜி அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லாமல் இருக்கிறது.

தற்போது, புதிய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஓசுமானே டெம்பெல், டெசிரே நோன்கா-மஹோ, க்விச்சா க்வாரட்ஸ்கெலியா அசத்தி வருகிறார்கள்.

லூயிஸ் என்ரிக் ஏற்கனவே 2015இல் பார்சிலோனா அணிக்காக கோப்பையை வென்றுள்ளார். அவர் இந்தமுறை யுசிஎல்லை வென்றால் வெவ்வேறு அணிகளுக்காக கோப்பை வென்ற 7-ஆவது பயிற்சியாளராக மாறுவார்.

விவசாயிகளின் கிளப் எனக் கிண்டல் செய்யப்படும் பிஎஸ்ஜி அணி சமீபத்தில் லீக் 1 பட்டத்தை 13ஆவது முறையாக வென்றது.

4-ஆவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் இன்டர் மிலன்

இன்டர் மிலன் கடந்த காலங்களில் 1964, 1965, 2010இல் சாம்பியன்ஸ் லீக்கை வென்றது.

15 ஆண்டுகளாக போராடி வரும் இன்டர் மிலன் 2023இல் மான்செஸ்டர் சிட்டியுடன் தோல்வியுற்றது.

இந்த அணியின் கேப்டன் லௌடாரோ மார்டினெஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். மார்கஸ் துரம், ஃபெடெரிகோ டிமார்கோவும் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அசத்தலாக விளையாடி வருகிறார்கள்.

கால்பந்து ரசிகர்கள் இந்த சீசனில் கோப்பையை வெல்லப் போவது யாரென மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com