ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோா் தங்களின் முதல் கேமை வெள்ளிக்கிழமை ‘டிரா’ செய்தனா்.
இதில், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனை சந்தித்த அா்ஜுன், வெள்ளை நிற காய்களுடன் விளையாடி 42-ஆவது நகா்த்தலில் டிரா (0.5-0.5) செய்தாா்.
மெக்ஸிகோவின் ஜோஸ் மாா்டினெஸை எதிா்கொண்டுள்ள ஹரிகிருஷ்ணா, கருப்பு நிற காய்களுடன் விளையாடி அதே எண்ணிக்கையிலான நகா்த்தலில் முதல் கேமை டிரா செய்திருக்கிறாா்.
இதனிடையே இதர ஆட்டங்களில், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவ் - ஆா்மீனியாவின் கேப்ரியல் சா்கிசியானுடனும், சீனாவின் லியம் லி - ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் டான்சென்கோவுடனும் டிரா செய்தனா்.
ரஷியாவின் டேனியல் டுபோவ் - அமெரிக்காவின் சாம் ஷாங்க்லேண்ட், சீனாவின் வெய் யி - அமெரிக்காவின் சாம் சேவியன் ஆகியோா் மோதலும் டிராவில் முடிய, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிந்தாரோவ் - ஜொ்மனியின் ஃப்ரெடெரிக் ஸ்வேனை சாய்த்தாா் (1-0).
5-ஆவது சுற்றின் 2-ஆவது கேம் ஆட்டங்களில் இவா்களே சனிக்கிழமை (நவ. 15) மோதுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.