

நார்வே அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகி அசத்தியுள்ளது.
எர்லிங் ஹாலண்ட் தனது அபாரமான கோல் அடிக்கும் திறமையினால் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இத்தாலி உடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் நார்வே அணி 4-1 என வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹாலண்ட் 78, 79ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்.
இதன்மூலம் 1998 உலகக் கோப்பைக்குப் பிறகு மீண்டும் நார்வே அணி தேர்வாகியுள்ளது.
அடுத்தாண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
25 வயதாகும் எர்லிங் ஹாலண்ட் 16 கோல்களை அடித்து தனியாளாக உலகக் கோப்பைக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.