

மகளிர் உலகக் கோப்பை கபடி பட்டத்தை இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது.
வங்க தேச தலைநகர் டாக்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, சீன தைபே அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 35 - 28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி இந்தியா கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
11 அணிகள் பங்கேற்ற மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா அரையிறுதியில் ஈரானையும், சீன தைபே வங்கதேசத்தை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா ஆடவர் கபடி அணியின் முன்னாள் கேப்டன் அஜய் தாகுர் கூறுகையில், டாக்காவில் மகளிர் அணி உலகக் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது இந்தியாவுக்கு மிகவும் பெருமையான தருணம். இந்த உத்வேகம் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.