

லிவர்பூல் அணியின் வீரர் தியாகோ ஜோடாவின் சகோதரர் ஆண்ட்ரே சில்வாவுக்குப் (25 வயது) பதிலாக எல்சே வீரர் ஆண்ட்ரே டி சில்வா (30 வயது) புகைப்படத்தை அஞ்சலி விடியோவில் ரியல் மாட்ரிட் பயன்படுத்தியது பேசுபொருளானது.
உயிருடன் இருக்கும் வீரரின் புகைப்படத்தை பயன்படுத்திய இந்தத் தவறுக்கு ரியல் மாட்ரிட் அணி வருத்தம் தெரிவித்துள்ளது.
லிவர்பூல் வீரர் தியாகோ ஜோடா, அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் ஸ்பெயின் கார் விபத்தில் கடந்த ஜூலையில் இறந்தனர்.
ரியல் மாட்ரிட் அணி இந்த ஆண்ட்ரே சில்வா புகைப்படத்திற்குப் பதிலாக எல்சே அணியின் ஆண்ட்ரே டி சில்வாவின் புகைப்படத்தினை தனது அஞ்சலி விடியோவில் தவறுதலாக பயன்படுத்தியது.
இது குறித்து ரியல் மாட்ரி அணியின் தலைவர் ஃபுளோரெண்டினோ பெரேஜ் மனிதத் தவறு எனக் கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
அஞ்சலி விடியோவில் தவறு நடந்துவிட்டது. அது ஒரு மனிதப் பிழை. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
ரியல் மாட்ரிட் அணி எல்சே உடனான போட்டியில் 2-2 என சமனில் முடிந்தது.
கார் விபத்தில் இறந்தபோதே இந்தப் பெயர் குழப்பத்தினால் பலரும் உயிருடன் இருக்கும் ஆண்ட்ரே டி சில்வாவின் மனைவிக்கு அஞ்சலி செய்திகள் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.