கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர்

இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு? கம்பீர் விளக்கம்!

தோல்விக்கான பழி என்னிடமிருந்துதான் தொடங்கும்: கௌதம் கம்பீர்
Published on

இந்திய அணியின் தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்த முடியாது என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

குவாஹாட்டியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றது.

கம்பீர் தலைமையிலான 18 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகள் தோல்வியுற்ற நிலையில், தோல்விக்கான பழி தன்னிடமிருந்து தொடங்குவதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கௌதம் கம்பீர் பேசுகையில், ``2-0 என்ற தொடர் தோல்விக்கு அணியில் உள்ள ஒவ்வொருவருமே பொறுப்பேற்க வேண்டும். அனைவர் மீதும் பொய் பழி சுமத்தப்படும்; ஆனால், என்னிடமிருந்துதான் அது தொடங்கும்.

இதில் தனிப்பட்ட வீரர்களையோ ஷாட்களையோ குற்றம் சொல்ல முடியாது. நான் ஒருபோதும் தனிநபரை குற்றம் சாட்டமாட்டேன். நாம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்திய அணியின் பயிற்சியாளராக அவரின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, ``இதை நான் முன்பே கூறியுள்ளேன். இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை. பிசிசிஐ தான் அதனை முடிவெடுக்க வேண்டும். இங்கிலாந்தில் வெற்றி, சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பையை வென்ற அதே ஆள்தான் நான். இது எப்போதும் கற்றுக்கொள்ளும் அணி.

நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் உண்மையிலேயே தீவிரமாக இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்குங்கள்’’ என்றும் கூறினார்.

இதையும் படிக்க: பும்ரா செய்தது மட்டும் நியாயமா? தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா கேள்வி!

Summary

India vs South Africa 2025: Gautam Gambhir Asks BCCI To Take Call On His Future

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com