
உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்பில் இத்துடன் இவர் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு 48 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றுள்ளார்.
இதற்கு முன்பாக 2017, 2022 உலக சாம்பியன்ஷிப்பில் முறையே வெண்கலம், வெள்ளி வென்றிருந்தார்.
தற்போது, நார்வேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் (84 கிலோ ஸ்நாட்ச் + 115 கிலோ க்ளீன், ஜெர்க்) மொத்தமாக 199 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார்.
87 கிலோவை தூக்க முயற்சித்த போது இரண்டு முறை தவறியவர், மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பி 115 கிலோ க்ளீன், ஜெர்க் பிரிவில் மூன்று முறையும் வெற்றிகரமாக தூக்கி அசத்தினார்.
இந்தப் பிரிவில், மீராபாய் சானு 109 கிலோ, 112 கிலோ, 115 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி அசத்தினார்.
கடைசியாக, மீராபாய் சானு 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 115 கிலோவை தூக்கி வெள்ளி வென்றிருந்தார்.
தங்கம் வென்ற வட கொரிய வீராங்கனை
வட கொரியாவைச் சேர்ந்த ரி சாங் கும் 213 கிலோ (91 கிலோ + 122 கிலோ) பளுவைத் தூக்கி தங்கம் வென்றார். மேலும், க்ளீன், ஜெர்க் பிரிவில் 122கிலோ பளுவைத் தூக்கி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தான்யத்தோன் சுக்சரோயன் 198 கிலோ (88 கிலோ + 110 கிலோ) பளுவைத் தூக்கி வெண்கலம் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.