39 வயதில் டெஸ்ட்டில் அறிமுகம்..! பாகிஸ்தான் வீரர் சாதனை!

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமான 39 வயது வீரர் பற்றி...
Asif Afridi
ஆசிப் அஃப்ரிடி. ENS
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆசிப் அஃப்ரிடி, தனது 39-ஆவது வயதில் அறிமுகமாகி இரண்டாவது வயதான வீரர என்ற சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு முன்பாக மற்றுமொரு பாகிஸ்தான் வீரர் மிரன் பக்‌ஷா இந்தியாவுக்கு எதிராக 47ஆவது வயதில் அறிமுகமாகி முதலிடத்தில் இருக்கிறார்.

முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் தற்போது ராவல்பிண்டியில் தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதில் ஆசிப் அஃப்ரிடி விளையாடுகிறார்.

ஆசிப் அஃப்ரிடி கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதினால் ஆறு மாதம் விளையாட தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நோமன் அலி, சஜித் கான் இவர்களுடன் ஆசிப் அஃப்ரிடியும் சேர்ந்தால் பலமான சுழல்பந்துவீச்சாக இருக்குமென கணிக்கப்படுகிறது.

Summary

Pakistan have handed a Test cap to 39-year-old left-arm spinner Asif Afridi, who has served a six-month ban for spot-fixing, in the second match against South Africa, which began Monday at the Rawalpindi Cricket Stadium.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com