

தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாட்டில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் 90 ஆவது கிராண்ட் மாஸ்டராகவும் தமிழ்நாட்டின் 35 ஆவது கிராண்ட் மாஸ்டராகவும் சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர். இளம்பரிதி (வயது 16) தேர்வாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது இந்தச் சாதனைக்கு, தமிழ்நாட்டின் துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த, அவரது பதிவில், ”வரலாற்றில் இளம்பரிதி தனது திறமையை வெளிப்படுத்தி, பட்டத்தைப் பெற்று தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும்போது, இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி வருவதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டின் 35-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 16 வயது இளம்பரிதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.