
சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூல் கால்பந்து வீரரரும் எகிப்திய அரசன் என்று அழைக்கப்படும் முகமது சாலா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அத்லெடிகோ மாட்ரிட் உடனான போட்டியில் லிவர்பூல் அணி 3-2 என த்ரில் வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக்கில் தனது முதல் போட்டியில் லிவர்பூல் அணி, ஜூலியன் அல்வராஸ் இல்லாத அத்லெடிகோ மாட்ரிட் உடன் மோதியது.
இந்தப் போட்டியில் முகமது சாலா 4-ஆவது நிமிஷத்தில் ஓர் அசிஸ்ட்டும் 6-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தும் அசத்தினார்.
இதன்மூலம், சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இங்கிலாந்து நாட்டின் கிளப் அணிகளில் 6 நிமிஷங்களில் ஓர் அசிஸ்ட், ஒரு கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனைக்கு முகமது சாலா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அத்லெடிகோ மாட்ரிட் சார்பில் 45+3, 81-ஆவது நிமிஷங்களில் மார்கோஸ் லொரேன்டா கோல் அடித்து 2-2 என சமன்படுத்த, 90+2-ஆவது நிமிஷத்தில் வான் டிஜிக் கோல் அடித்து வெற்றிப் பெறச் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.