
கேராளத்துக்கு வரும் ஆர்ஜென்டீனா அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட தேதி முடிவாகாவிட்டாலும் நவ.12 முதல் நவ.18ஆம் தேதிகளில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா கால்பந்து அணி இந்தியாவுக்கு வருகிறது.
கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி நட்பு ரீதியிலான போட்டியில் கொச்சியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எதிரணி ஆஸ்திரேலியாவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடலைப் பார்வையிடுவதற்காக ஆர்ஜென்டீனாவின் உதவியாளர் நாளை கொச்சிக்கு வருவதாகவும் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
2011ஆம் ஆண்டு ஆர்ஜென்டீன அணி கொல்கத்தாவில் வெனிசூலாவை எதிர்த்து விளையாடியது.
இந்தியாவிலேயே வட கிழக்கு மாநிலங்களுக்குப் பிறகு, கேரளத்தில்தான் கால்பந்துக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக மெஸ்ஸிக்கு அதிகமாகவே இருக்கிறார்கள்.
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி 2026 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருப்பதால், கேரளாவுக்கு வரும் அவருக்கு மிகுந்த வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மெஸ்ஸி 882 கோல்கள், 391 அசிஸ்டுகளைச் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.