
ஐரோப்பா லீக்கின் தொடக்க போட்டியாக நடைபெறும் நிஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கலவரத்தில் ஈடுபட்டதால் இந்தக் கைது நடவடிக்கை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான நிஸ் அணிக்கும் ரோமா அணிக்கும் இத்தாலி நாட்டின் கிளப்பான ரோமா அணிக்கும் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஐரோப்பியன் லீக்கில் மோதுகிறது.
இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு காவல்துறையுடன் ரோமா ஆதரவாளர்கள் பொருள்களை எரிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
லஜியோ அணி ரோமாவின் பரம எதிரியாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கடந்த செப்.21ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ரோமா அணி 1-0 என வென்றது.
இதனை ரோமா அணியினர் ரசிகர்களுடன் சேர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், 200 காவல்துறையினர் நிஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுமென முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், கையில் ஆயுதங்கள் வைத்திருந்த 102 ரோமா அணியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அனைத்து ஆயுதங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் பொதுச் சொத்துகள் எந்தவிதமான சோதாரமில்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளன.
போட்டி நடைபெறும் புதன்கிழமை அன்று 400 காவல்துறை பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
மூன்றாண்டுக்கு முன்பாக நிஸ் அணிக்கும் ஜெர்மனியின் கோலோக்னே கிளப்புக்கும் இடையிலான போட்டியின்போது 32 பேருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.