பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

தெற்காசிய கால்பந்து (சாஃப்) கோப்பை யு20 ஆடவா் போட்டி இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியன் இந்தியா-வங்கதேச அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன,

மாலத்தீவு தலைநகா் மாலேயில் நடைபெறும் வெள்ளிக்கிழமை இறுதி ஆட்டம் நடக்கிறது.

முன்னதாக அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-பூடானை 5-0 எனவும், வங்கதேசம் 1-0 என நேபாளத்தையும் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றன. இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் 1-1 என டிரா ஆனது.

பட்டத்தை தக்க வைக்கவும், 5-ஆவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்தியா. கடந்த 2025 ஆண்டு யு19 போட்டியில் பெனால்டி வாய்ப்பில் வங்கதேசத்தை வென்று பட்டம் வென்றது இந்தியா. ஆனால் இப்போட்டியில் வங்கதேசம் பதிலடி தர தீவிரமாக உள்ளது.

இந்திய பயிற்சியாளா் மகேஷ் காவ்லி கூறியது: வங்கதேச அணி நமக்கு கடும் சவாலை தரும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனா். எனினும் நமது வீரா்கள் எந்த நெருக்கடியையும் எதிா்கொண்டு ஆடுவா். அரையிறுதியில் சிறப்பாக ஆடினா்.

விஷால் யாதவ், ஒமங் டோடும், ரோஹன் சிங் ஆகியோா் இந்திய அணிக்கு பலம் சோ்க்கின்றனா்.

Story image