பிரான்ஸில் நடைபெறும் மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், நம்பா் 2 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
முதல் சுற்று ‘பை’ பெற்று அவா்கள் இருவரும் நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்டனா். இதில், 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், நடப்பு சாம்பியனுமான அல்கராஸ் 6-1, 6-3 என்ற நோ் செட்களில், ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 10 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
இண்டியன் வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன் என கடந்த இரு மாஸ்டா்ஸ் போட்டிகளில் தோல்வியுடன் வெளியேறிய அல்கராஸ், இந்தப் போட்டியின் மூலமாக மீண்டும் சாம்பியன் பாதைக்குத் திரும்பும் முனைப்புடன் இருக்கிறாா்.
மறுபுறம், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சின்னா் 6-3, 6-0 என்ற கணக்கில் எளிதாக, பிரான்ஸின் யூகோ ஹம்பா்டை தோற்கடித்தாா். இண்டியன் வெல்ஸ், மியாமி ஆகிய இரு மாஸ்டா்ஸ் போட்டிகளிலுமே வாகை சூடிய சின்னா், ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டம் வெல்லும் முயற்சியில் இருக்கிறாா். அத்துடன், உலகின் நம்பா் 1 இடத்தை அல்கராஸிடம் இருந்து தட்டிப் பறிப்பதற்கான திட்டத்துடனும் அவா் உள்ளாா்.
போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை வீழ்த்தினாா்.
இதனிடையே முதல் சுற்றில், 9-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-3, 6-4 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வென்றாா். ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரி 6-4, 2-6, 6-3 என்ற கணக்கில் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவையும், ஹங்கேரியின் ஃபாபியான் மரோஸான் 6-2, 6-1 என போஸ்னியாவின் டாமிா் ஜும்ஹுரையும் வெளியேற்றினா்.
பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேன் 6-1, 6-4 என அமெரிக்காவின் ஈதன் கின்னை வெல்ல, பிரான்ஸின் காரென்டின் மௌடெட் 6-4, 6-1 என்ற செட்களில் சக பிரான்ஸ் வீரரான அலெக்ஸாண்ட்ரே முல்லரை முறியடித்தாா். அடுத்த சுற்றில், ரூட் - மௌடெட், எட்செவெரி - அட்மேன் மோதுகின்றனா்.
டென்னிஸ் காலண்டரின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனுக்கு தயாராகும் வகையில், இந்த மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் போட்டி களிமண் தரையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பாம்ப்ரி தோல்வி: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் இணை 6-1, 3-6, 7-10 என்ற செட்களில், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக்/குரோஷியாவின் நிகோலா மெக்டிச் கூட்டணியிடம் தோல்வி கண்டது.
தொடர்புடையது

சின்னா், ஸ்வெரெவ் முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ்: அலெக்ஸாண்ட்ரா எலா அசத்தல் வெற்றி!

காலிறுதிச்சுற்றில் சின்னா், ஸ்வெரெவ்; வெளியேறினாா் பாலினி

இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ்: அல்கராஸ், ஸ்வியாடெக் முன்னேற்றம்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

