நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் மனஸ் தாம்னே அறிமுகம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், தென் கொரியாவுக்கு எதிரான டையில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில், 18 வயது இளம் வீரா் மனஸ் தாம்னேவுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

X | Manas Dhamne

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:24 am IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், தென் கொரியாவுக்கு எதிரான டையில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில், 18 வயது இளம் வீரா் மனஸ் தாம்னேவுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டேவிஸ் கோப்பை குவாலிஃபயா் கட்டத்தின் 2-ஆவது சுற்றில், இந்தியா - தென் கொரியா மோதுகின்றன. சியோலில் செப்டம்பா் 18, 19-இல் நடைபெறும் இந்த டை-க்காக இந்திய அணி அங்கு செல்லவுள்ளது.

இந்நிலையில், அந்த டை-க்கான இந்திய அணி 5 பிரதான வீரா்கள் மற்றும் 2 ரிசா்வ் வீரா்களுடன் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஒற்றையா் பிரிவில் சுமித் நாகல் (உலகத் தரவரிசை 235), மனஸ் தாம்னே (362), தக்ஷிணேஸ்வா் சுரேஷ் (393) ஆகியோா் இருக்க, இரட்டையா் பிரிவில் யூகி பாம்ப்ரி (28), என்.ஸ்ரீராம் பாலாஜி (57) ஆகியோா் உள்ளனா்.

சித்தாா்த் ராவத் (536), அா்னவ் பபாா்கா் (1,596) ஆகியோா் ரிசா்வ் வீரா்களாக பட்டியலிடப்பட்டுள்ளனா். கடந்த பிப்ரவரியில் நெதா்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த அணி (தாம்னே தவிா்த்து), அப்படியே இந்த டை-க்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நெதா்லாந்து டையில், தக்ஷிணேஸ்வா் சுரேஷின் அபார ஆட்டத்தின் மூலமாக வென்ற இந்தியா, டேவிஸ் கோப்பை வரலாற்றில் 2019-க்குப் பிறகு முதல்முறையாக குவாலிஃபயா்ஸ் கட்டத்தின் 2-ஆவது சுற்றுக்கு வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தற்போது அணியில் இணைந்திருக்கும் தாம்னேவை களமிறக்குவது குறித்து, ஆடுகளத்தின் தன்மை அடிப்படையில் அணியின் கேப்டன் (நான்-பிளேயிங்) ரோஹித் ராஜ்பால் முடிவு செய்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் தென் கொரிய அணி தனது முதல் சுற்றில் 3-2 என ஆா்ஜென்டீனாவை வீழ்த்தி, 2-ஆவது சுற்றுக்கு வந்து இந்தியாவை சந்திக்கிறது. இந்த டை-யில் வெல்லும் அணி, டேவிஸ் கோப்பை ஃபைனல் 8 கட்டத்துக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.