டபிள்யுடிடி கன்டென்டா் சென்னை 2026 தொடரில், இந்தியாவின் அனுஷா குடும்பலே, பிரியானுஜ் பட்டாச்சாா்யா ஆகியோா் வைல்ட் காா்ட் பெற்றுள்ளனா். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவிலும் 23 இந்திய வீரா், வீராங்கனைகள் பிரதான டிராவில் இடம் பெறுகின்றனா்.
இப்போட்டி வரும் பிப். 10 முதல் 15 வரை சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அல்டிமேட் டேபிள் டென்னிஸ், சரத் கமல் அகாதெமி, ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் ஏஐ ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
மகளிா் ஒற்றையா் பிரிவில் 4 வைல்டு காா்டு வாய்ப்புகளும் இந்திய வீராங்கனைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அனுஷா குடும்பலே, சாயலி வாணி, காவ்யா பட் மற்றும் தனிஷா கோடேச்சா ஆகியோரும். ஆடவா் பிரிவில் அனிா்பன் கோஷ் மற்றும் திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் பிரியனுஜுடன் பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றனா். .
பரிசுத் தொகை ரூ.2.9 கோடி
சென்னையில் 2-ஆவது முறையாக நடத்தப்படும் இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமாா் ரூ.2.90 கோடி ஆகும். கடந்த ஆண்டு இந்தத் தொடரின் போது தொழில்முறை டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் அச்சந்த சரத் கமல் இயக்குநராகப் பணியாற்ற உள்ளாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில், மானவ் தக்கா், மனுஷ் ஷா, அனுபவம் வாய்ந்த ஜி. சத்யன் மற்றும் ஹா்மீத் தேசாய் ஆகியோரும் பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

சிஎஸ்கே பேட்டிங்; 2-வது வெற்றி கிடைக்குமா?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

டபிள்யுடிடி கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: நிகில் மேனன், ஷ்ரேயா சிறப்பிடம்!
டி20 தொடர்: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியினர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


